இந்தியா

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பிறந்தநாளுக்கு ஆளுநர் அர்லேகர் வாழ்த்து!

ஞானம், கருணை மற்றும் தேச சேவைக்கான முன்மாதிரியான அர்ப்பணிப்புடன் நமது தேசத்தைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டும்.

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், குடியரசுத் தலைவர் முர்முவுக்குத் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும் அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும், நீண்ட ஆயுளுடனும், தமது ஞானம், கருணை மற்றும் தேச சேவைக்கான முன்மாதிரியான அர்ப்பணிப்புடன் நமது தேசத்தைத் தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT