இந்தியா

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பிறந்தநாளுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறோம்.

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் முர்முவுக்குத் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,

இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறோம். இவ்வாறு குறிப்பிட்டார்.