இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 16-ந்தேதி மணிலா செல்கிறார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம் 'ஆசியான்' என்று அழைக்கப்படுகிறது. அதில் 11 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு அடுத்த வாரம் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் நடக்கிறது.
அதில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி 16-ந்தேதி மணிலா செல்கிறார்.
'ஆசியான்' தலைமையிலான கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டு கூட்டங்களிலும் அவர் பங்கேற்பார் என்று மத்திய வெளியுறவு அமைச்சக (கிழக்கு) செயலாளர் ருத்ரேந்திர தாண்டன் தெரிவித்தார்.