இந்தியா

சென்னை பூங்கா, குன்னூர் உள்பட 75 ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

மத்திய பிரதேசத்தில் உள்ள சாஞ்சி, விதிஷா, அசோக்நகர், சிவ்புரி உள்ளிட்ட 13 ரெயில் நிலையங்களும் திறக்கப்படுகின்றன.

அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 75 ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

'அம்ரித் பாரத்' ரெயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏராளமான ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் ரூ.1,570 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட 75 ரெயில் நிலையங்கள் திறப்புவிழாவுக்கு தயாராகி உள்ளன. அவை இன்று பிற்பகல் 3.40 மணிக்கு பிரதமர் மோடியால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்படுகிறது.

இதில் தமிழகத்தில் உள்ள சென்னை பூங்கா மற்றும் குன்னூர், சின்னசேலம் ரெயில் நிலையங்களும் அடக்கம். மத்திய பிரதேசத்தில் உள்ள சாஞ்சி, விதிஷா, அசோக்நகர், சிவ்புரி உள்ளிட்ட 13 ரெயில் நிலையங்களும் திறக்கப்படுகின்றன. நவீன பயணிகள் வசதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் மற்றும் அந்தந்த பகுதியின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.