இந்தியா

ராஸ் லஃப்பான் வெடிவிபத்து: பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கத்தார் அமீர்

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாக பிரதமர் கூறினார்.

கத்தாரின் ராஸ் லஃப்பான் (Ras Laffan) தொழிற்பேட்டையில் நிகழ்ந்த துயர விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்தது குறித்து கத்தார் அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது துயரத்தை பகிர்ந்துகொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு கத்தாரின் ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில் உள்ள எல்என்ஜி (LNG) நிலையத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்; இவர்களில் 12 பேர் இந்தியர்கள் ஆவர்.

எக்ஸ் தள பதிவு:

"கத்தாரின் ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில் நிகழ்ந்த துயர விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்தது குறித்துத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்த கத்தார் அமீருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்," என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களின் துயரத்தில் தானும் கத்தார் அமீரும் பங்கேற்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர் கூறினார்.

"இந்தியாவும் கத்தாரும் தங்கள் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் உறுதியுடன் இருப்பதோடு, ஒருவருக்கொருவர் தோளோடு தோள் நின்று வெடிவிபத்வெடிவிபத்ஆதரவளிக்கின்றன," என்று மோடி குறிப்பிட்டார்.

வெடிவிபத்து:

கத்தார் எனர்ஜி எல்என்ஜி நிறுவனத்தால் இயக்கப்படும் ராஸ் லஃப்பான் தொழிற்பேட்டையில் உள்ள 'பார்சான்' எரிவாயு விநியோக நிலையத்தில் நிகழ்ந்த இந்த வெடிவிபத்தில், இந்தியர்கள் உட்பட 66 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் சீரான உடல்நிலையுடன் இருப்பதாகவும், அவர்களுக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கத்தார் அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.