பாஸ்போர்ட்  
இந்தியா

பாஸ்போர்ட் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல - மத்திய அரசு

ஆதார் அட்டையும் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல.

பாஸ்போர்ட், குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று 14வது பாஸ்போர்ட் சேவை தினம் கொண்டாடப்பட்ட நிலையில் வெளியுறவு அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில்,

"பாஸ்போர்ட்கள் சர்வதேசப் பயணத்திற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் பயண ஆவணங்கள்.

இதன் பொருள், பாஸ்போர்ட்டை வைத்திருப்பது மட்டுமே குடியுரிமையை வரையறுத்துவிடாது என்பதாகும்.

இந்திய பாஸ்போர்ட்கள் இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டாலும் கூட அது இந்திய குடியுரிமையை உறுதி செய்யும் ஆதாரம் அல்ல" என தெரிவித்துள்ளது.

குழப்பம்

முன்னதாக ஆதார் அட்டையும் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியர்களுக்கு மட்டுமே இந்திய பாஸ்போர்ட் வழங்கப்படும்போதும் அதுவும் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது முரண்பாடாக அமைந்துள்ளது.

இதனால் குடியுரிமைக்கு எதுதான் ஆதாரம் என்ற குழப்பம் பலரிடையே எழுந்துள்ளது.