பாகிஸ்தானின் தொழில் தலைநகரான கராச்சியில் உள்ள சிந்து ரேஞ்சர்ஸ் பாதுகாப்பு படை தலைமையகத்தை குறிவைத்து நேற்று கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது.
இந்த தற்கொலைப் படைத் தாக்குதல் அதைதொடர்ந்து மறைந்திருந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் பேர் கொல்லப்பட்டனர்.
பதிலுக்கு பயங்கரவாதிகள் மீது நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
கராச்சி தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜமாத் உல் அஹ்ரார் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பு பொறுப்பேற்றது.
ஆனால் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான், இந்தியா மீது குற்றம்சாட்டியுள்ளதற்கு வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானால் பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், அவற்றை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது என்றும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், "ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்குப் பதிலாக, தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாக ஆக்குவதை நிறுத்த வேண்டும்.
மற்றவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக பாகிஸ்தான் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
பயங்கரவாதத்தை எந்த வடிவத்திலும் அரசின் கொள்கைக் கருவியாகப் பயன்படுத்தும் போக்கு முடிவுக்கு வர வேண்டும்" என்றும் அவர் கூறினார்.