ஓணம் 
இந்தியா

ஓணம் பண்டிகை மகிழ்ச்சி, ஒற்றுமை, செழிப்பு ஆகிய உணர்வுகளை வலுப்படுத்தட்டும்: பிரதமர் மோடி

பிரதமர் மோடி கேரள மக்களுக்கு ஓணம் வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஓணம் பண்டிகை

கேரளாவில் ஓணம் பண்டிகை என்பது மலையாள சூரிய நாட்காட்டியின்படி ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில், பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் 10 நாள் பண்டிகையாகும்.

இது அறுவடை காலத்தை குறிப்பதால், மாநிலத்தின் செழிப்பு மற்றும் விவசாய உற்பத்தியுடன் தொடர்புடையது மட்டுமல்லாமல், பண்டைய சாஸ்திரங்களின்படி, ஓணம் மகாபலி மன்னனின் மீள்வருகையுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது.

ஓணம் கொண்டாட்டங்கள்

இந்த ஆண்டு, ஓணம் கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 16 அன்று தொடங்கி, இன்று திருவோணத்துடன் நிறைவடைகிறது.

கேரள மக்களிடையே ஓணம் பண்டிகைக்கு மிகுந்த மத முக்கியத்துவம் உண்டு.

இந்தப் பண்டிகையை கொண்டாடுவதன் மூலம், நல்ல விளைச்சலை தந்த பூமிக்கு மக்கள் தங்கள் நன்றியை வெளிப்படுத்துகிறார்கள்.

மகாபலி மன்னர்

மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக, வாமன பெருமானையும் தங்களுக்குப் பிரியமான மகாபலி மன்னரையும் வழிபடுகிறார்கள்.

பிரதமர் மோடி வாழ்த்து

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஓணம் பண்டிகையை கொண்டாடும் கேரள மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துகள். இது உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் ஒரு துடிப்பான பண்டிகை.

இந்த பண்டிகை மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் செழிப்பு ஆகிய உணர்வுகளை மேலும் வலுப்படுத்தட்டும்” என்று தெரிவித்துள்ளார்.