அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், காங்கிரஸ் திட்டங்களை காப்பி அடிப்பதா கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்து பேசிய சிவகுமார், முதலில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்கள் தங்கள் திட்டங்களை பின்பற்றியதாகவும், தற்போது டிரம்பும் தங்களை பின்வற்றுவதாகவும் தெரிவித்தார்.
“இதுதான் காங்கிரஸ் கட்சியின் பலம். இன்று ஒட்டுமொத்த உலகமும் நமது அரசியலமைப்பை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.” என தெரிவித்தார்.
அமெரிக்காவில் குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொண்டால், ஒவ்வொரு வயது வந்த அமெரிக்க குடிமகனுக்கும் $5,000 (சுமார் ரூ.4.79 லட்சம்) உதவித்தொகை வழங்கப்படும் என டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
செப்டம்பர் 9 அன்று டெக்சாஸின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் மாநாட்டுப் பேரணியில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த திட்டத்தை கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு செயல்படுத்தி வரும் ‘ஐந்து கேரண்டி’ திட்டங்களுடன் ஒப்பிட்டு சிவகுமார் பேசியுள்ளார்.