இந்தியா

அடுக்குமாடி குடியிருப்பின் 22-வது மாடியில் ஏசி வெடித்து பயங்கர தீ விபத்து : நொய்டாவில் அதிர்ச்சி

உடனடியாக மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையைக் கண்காணிக்குமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு..

உத்தரப்பிரதேசத்தின் நொய்டா செக்டர் 119-ல் உள்ள 'அரண்யா சொசைட்டி' குடியிருப்பு வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்பின் 22 வது மாடியில் உள்ள ஒரு வீட்டில், ஏசி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. வெடித்த சில நிமிடங்களிலேயே அந்த பகுதி முழுவதும் தீ பரவியது.

தீயணைப்பு படை விரைவு..

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சுமார் 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தீவிரமாக போராடினர்.

உயிர்சேதம் இல்லை..

அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிர்சேதம் இல்லை என்று போலீசார் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குடியிருப்பில் வசித்த அனைவருமே உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு..

இந்த விபத்து குறித்து அறிந்த உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உடனடியாக மூத்த அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையைக் கண்காணிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை வழங்கவும், நிர்வாக ரீதியாக முழு விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT