தீபாவளி பண்டிகை முடியும்வரை எந்தப் போராட்டமும் இல்லை என்றும், பண்டிகை காலத்தினை குடும்பத்தினருடன் செலவிடுங்கள் எனவும் ஆதரவாளர்களை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லி காவல்துறையின் அடக்குமுறையால், கடந்த சில நாட்களாக போராட்டக்காரர்களின் குடும்பத்தினர் கவலையில் இருப்பதால், இந்த நேரத்தை அவர்களோடு செலவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள பேசியுள்ள அபிஜித்.,
“என் அன்பான கரப்பான் பூச்சிகளே, நீங்கள் அனைவரும் சில நாட்களுக்கு உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பண்டிகைகள் வரவிருக்கின்றன, கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்களுக்குப் பிறகு, உங்கள் குடும்பத்தினர் மிகவும் கவலையாக இருப்பார்கள்.
எனவே, சில நாட்களுக்கு உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள். உங்கள் குடும்பத்தினருடனும், உங்கள் அன்புக்குரியவர்களுடனும் இருங்கள்.
தன்னால் ஒருநாள் கூட சிறையில் கழிக்க முடியாது என நினைத்த அதே சௌரவ்தாஸ்தான், ஐந்து நாட்களுக்கு பின்னர் புன்னகைத்துக்கொண்டே வெளியே வந்தார். நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்த பிறகும், அவர் பயப்படவில்லை. இதுதான் வலிமை.
ஐந்து நாட்களாகச் சிறையில் இருந்த அஷுதோஷ், நீதிமன்றத்திற்கு வந்த பிறகும் முகத்தில் எந்த அச்சமும் இல்லை. இதுதான் பலம்.” என தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டங்கள் நடத்த கரப்பான்பூச்சி கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வரும்நிலையில் அபிஜித் தீப்கேவின் இந்த பதிவு வந்துள்ளது.