அபிஜித் தீப்கே, நேகா போராவை தடுப்புக் காவலில் வைத்தது சட்டவிரோதம் - மு.க.ஸ்டாலின்!

ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்வதைத் தவிர ஒன்றிய பாஜக அரசுக்கு வேறு வழியில்லை
அபிஜித்  தீப்கே, நேஹா போராவை தடுப்புக் காவலில் வைத்தது சட்டவிரோதம் - மு.க.ஸ்டாலின்!
Published on: 

டெல்லியில் தடையை மீறி தேசியக் கொடி ஏந்திப் போராட்டம் நடத்த முயன்றபோது, கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே மற்றும் நேகா போராவை டெல்லி காவல்துறை கைது செய்து ரகசிய இடத்தில் தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

இந்நிலையில் இவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தாமல் தடுப்புக் காவலில் எடுத்துள்ள டெல்லி காவல்துறையின் நடவடிக்கை சட்டவிரோதமானது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;

“அபிஜித் தீப்கே எங்கே? நேகா போரா எங்கே?

அவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதைக்கூடத் தெரிவிக்காமல் கைது செய்து வைத்திருப்பது அப்பட்டமான சட்டவிரோதச் செயலும், மனிதநேயத்துக்கு எதிரானதும் ஆகும்.

ஒன்றிய அரசு அவர்கள் இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும். போராட்டத்தை ஒடுக்க நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அதனை மேலும் வலுப்படுத்தவே செய்யும்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்வதைத் தவிர ஒன்றிய பாஜக அரசுக்கு வேறு வழியில்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com