இந்தியா

நாகலாந்தில் கள்ளச்சாராயம் அருந்தி 9 பேர் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத அல்லது அங்கீகரிக்கப்படாத மூலங்களில் இருந்து பெறப்படும் மதுப்பானங்களை அருந்துவதை தவிர்க்குமாறு அம்மாநில காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கள்ளச்சாராயம்

நாகலாந்தின் துயென்சாங் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் போலியானது என சந்தேகிக்கப்படும் மதுபானங்களை அருந்தியதாக 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது பேரும் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எச்சரிக்கை

9 பேர் பலியானதை அடுத்து, அம்மாநில காவல்துறை அடையாளம் தெரியாத அல்லது அங்கீகரிக்கப்படாத மூலங்களிலிருந்து பெறப்பட்ட மதுபானங்களை தவிர்க்குமாறு மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அம்மாநில அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது

மரணங்களுக்கான உறுதியான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், பாதிக்கபட்டவர்கள் கலப்படமான மதுபானம் அருந்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நாகலாந்து டிஜிபி ரூபின் சர்மா தெரிவித்தார்.

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி நேரடியாகவும் , மறைமுகமாகவும் மது அருந்தியதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது. அதற்கேற்ப விசாரணை நடைப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு

சந்தேகிக்கப்படும் மூலங்களிலிருந்து பெறப்பட்ட மதுபானத்தை அருந்துவதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக தகவல் பரப்புதல் மற்றும் பொது விழிப்புணர்வு முயற்சிகளும் அம்மாநில காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT