ஆந்திர மாநிலம், போகபுரத்தில் ரூ.4,750 கோடி மதிப்பில் 223 ஏக்கர் பரப்பளவில் அல்லூரி சீதா ராமராஜூ சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
மாநில பிரிவினைக்கு பிறகு திறக்கப்படும் முதல் மற்றும் இந்தியாவிலேயே மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம் இதுவாகும்.
3.8 கிலோ மீட்டர் நீளம் 45 மீட்டர் அகலம் கொண்ட 2 ஓடு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏர்பஸ் மற்றும் போயிங் போன்ற மிகப்பெரிய விமானங்கள் கூட எளிதாக தரையிறங்கலாம்.
5 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 25 ஆயிரம் டன் சரக்குகளை கையாளும் முனையும் மற்றும் தளவாட மண்டலங்களில் மருந்து, நீர் வாழ் மற்றும் கடல் சார் பொருட்கள் ஏற்றுமதி மூலம் தொழில் துறை வளர்ச்சிக்கு உதவும். உலக தரம் வாய்ந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த விமான நிலையம் மூலம் 15 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் 5.85 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். கடற்கரைக்கு அருகில் உள்ளதால் மீன் வடிவத்தில் விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று காலை திறந்து வைத்தார். விமான நிலைய திறப்பு விழாவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண், அமைச்சர்கள் நாரா லோகேஷ்,உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா மற்றும் அமைச்சர் கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
13 ஆயிரத்து 750 பழங்குடியின பெண்கள் கலந்துகொண்டு தின்ஷா நடனமாடி பிரத மருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரதமர் மோடி 3 லட்சம் பேர் கலந்துகொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட் டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு நகரம் முழுவதும் போலீ சாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.