நீட் மறுதேர்வு 
இந்தியா

22 லட்சம் மாணவர்கள், 5,440 மையங்கள், 1 லட்சம் கேமராக்கள்: நாடு முழுவதும் நீட் மறு-தேர்வு தொடங்கியது!

நீட் மறுதேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறும். ஈடுசெய் நேரத்திற்குத் தகுதியுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மாலை 6.20 மணி வரை நேரம் அனுமதிக்கப்படும்.

நாடு முழு​வதும் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வ கல்​லூரி​களில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்​பு​கள், சித்​தா, ஆயுர்​வே​தா, யுனானி, ஓமியோபதி படிப்​பு​கள், ராணுவ கல்​லூரி​களில் பி.எஸ்.சி. நர்​சிங் படிப்பு​கள் மற்​றும் கால்​நடை மருத்​து​வ படிப்​பின் அகில இந்​திய ஒதுக்கீட்டு இடங்​கள் ஆகியவை நீட் தேர்வு எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்​வில் தகுதி பெறு​பவர்​களை கொண்டு நிரப்பப்படுகின்​றன.

நாடுமுழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். இத்தேர்விற்காக 5,440 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வறையினை கண்காணிக்க 1 லட்சம் கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை ஆண்​டு​தோறும் நடத்துகிறது.

முன்னதாக வினாத்தாள் தகவல் கசிவைத் தொடர்ந்து மே 3 ஆம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டது.

அதன்​படி, 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான நீட் மறுதேர்வு நாடு முழு​வதும் இன்று நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெற உள்ளது. தகுதியுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மாலை 6.20 மணி வரை நேரம் அனுமதிக்கப்படும்.

தேர்​வு எழுத வந்த மாணவ-மாணவிகள் காலை 11 மணி முதல் மதி​யம் 1.30 மணி வரை தேர்வு மையத்​துக்​குள் அனு​ம​திக்​கப்பட்டனர். தேர்வு மையத்துக்குள் மாணவ-மாணவிகள் தண்​ணீர் தெளிவாக தெரியும் வகையிலான குடிநீர் பாட்​டில்களை எடுத்​து செல்ல அனுமதிக்கப்பட்டது. மத நம்​பிக்கை சார்ந்த அடையாளங்கள் மற்றும் பொருட்​களை அணியவும் அனுமதிக்கப்பட்டு இருந்தது.

சாதாரண ஆடைகளை அணியவும், முழுக்கை ஆடைகள் அல்​லது கம்பளி ஆடை அணியவும் அனு​ம​தி வழங்கப்பட்டு இருந்தது. முறையான சோதனைக்கு ஒத்​துழைக்​கும் வித​மாக, குறிப்​பிட்ட நேரத்துக்கு முன்​ன​தாகவே மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்கு வந்திருந்தனர்.

தேர்​வு எழுத வந்த மாணவ-மாணவிகள் காலை 11 மணி முதல் மதி​யம் 1.30 மணி வரை தேர்வு மையத்​துக்​குள் அனு​ம​திக்​கத் தொடங்கினர் . தேர்வு மையத்துக்குள் மாணவ-மாணவிகள் தண்ணீர் தெளிவாக தெரியும் வகையிலான குடிநீர் பாட்​டில்களை எடுத்​து செல்ல அனுமதி. மத நம்​பிக்கை சார்ந்த அடையாளங்கள் மற்றும் பொருட்​களை அணியவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

சாதாரண ஆடைகளை அணியவும், முழுக்கை ஆடைகள் அல்​லது கம்பளி ஆடை அணியவும் அனு​ம​தி வழங்கப்பட்டு உள்ளது. முறையான சோதனைக்கு ஒத்​துழைக்​கும் வித​மாக, குறிப்​பிட்ட நேரத்துக்கு முன்​ன​தாகவே மாணவ-மாணவிகள் தேர்வு மையத்துக்கு வரத்தொடங்கினர்.

முன்னதாக தேர்வர்கள் உயரம் குறைந்த, சாதாரண காலணி​களை அணியலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. உயர​மான காலணி​கள் மற்றும் கனமான அணி​கலன்​கள் அணிய தடைவிதிக்கப்பட்டது. மதியம் 1.30 மணிக்​கு பிறகு வந்​தால் அனுமதி இல்​லை என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் மாணவ-மாணவிகள் அதற்கு முன்னதாகவே தேர்வு மையத்துக்கு வர அறிவுறுத்தப்பட்டது.