பிரதமர் மோடி  
இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு கொடும் பாவச் செயல்.. பிரதமர் மோடி மௌனம் கலைப்பு

மொத்தம் 13 பேர் காவலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் 2 ஆம் நாள் கூட்டம் தொடங்கும் முன்னர் பிரதமர் மோடி என்டிஏ கூட்டணி பாராளுமன்ற எம்.பிக்கள் கூட்டத்தை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், கடந்த மே 3 நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி முதல் முறையாக வாய்திறந்துள்ளார்.

ஜூன் 20 முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி கட்சியின் தொடர் போராட்டம் இன்றுடன் 23வது நாளை எட்டும் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம், நேற்றைய சிஜேபி பேரணியில் ஏற்பட்ட வன்முறை உள்ளிட்ட தொடர் அழுத்தங்களை தொடர்ந்து மோடி மௌனம் கலைத்துள்ளார்.

மோடி

கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக பாராளுமன்ற விவகாரங்கள் குழு அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது,

வினாத்தாள் கசிவு ஒரு கொடிய பாவச் செயல். இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். தவறான பாதையில் செல்வது எளிது. ஆனால் அதிலிருந்து மீண்டும் சரியான பாதைக்கு திரும்புவது மிகவும் கடினம். அவர்களை தூண்டுவிடாமல், சரியான நாம் அவர்களை சரியான பாதைக்கு கொண்டு வர வேண்டும். அது நமது பொறுப்பு. இளைஞர்களின் எதிர்காலமே முக்கியம். இதில் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும்" என பேசியுள்ளார்.

இது அரசுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராடும் இளைஞர்களை குறிப்பிட்டு மோடி பேசியதாக புரிந்துகொள்ளப்படுகிறது.

ரிஜிஜூ

தொடர்ந்து கிரண் ரிஜிஜூ பேசுகையில், நீட் வினாத்தாள் கசிவு தெரியவந்ததும் 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும், தேர்வர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் அரசு, மறுதேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு, குறித்த நேரத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டதாக தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவும், எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிரதமர் மோடியின் கறார் உத்தரவிட்டுள்ளார் என கிரண் ரிஜிஜூ மேலும் தெரிவித்தார்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

நேற்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பிரதிநிதிகள் இருவர், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

அதில், நிர்வாக தோல்விக்கு காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவிநீக்கம் செய்ய வேண்டும், மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக்கை விடுவிக்க வேண்டும், நீட் குளறுபடிகளால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்ட 20 மாணவர்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தது.