சஞ்சீவ் குமார் 
இந்தியா

ஆதாரம் இல்லை.. 2024 நீட் வினாத்தாள் கசிவில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவருக்கு நீதிமன்றத்தில் சிபிஐ நற்சான்று

பீகார் மாநில காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் சஞ்சீவ் பெயர் சேர்க்கப்பட்டது.

2024ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் வினாத்தாள் கசிவு வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்பட்ட சஞ்சீவ் குமாருக்கு எதிராக எனது ஆதாரமும் கிடைக்கவில்லை என சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

பின்னணி

பீகாரில் 2024 நீட் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டிகளை விசாரித்த சிபிஐ, பட்னா நீதிமன்றத்தில் 45 பேருக்கு எதிராக பல குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது.

தொடக்கத்தில் பீகார் மாநில காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் சஞ்சீவின் பெயர் சேர்க்கப்பட்டது.

வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட பின் சிபிஐ, பலரை விசாரணை செய்ததோடு, டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளை தீவிரமாக ஆய்வு செய்தது.

ஆனால், சஞ்சீவ் இந்தக் குற்றத்துடன் நேரடியாகத் தொடர்புபடுத்தும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என சிபிஐ தற்போது தெரிவித்துள்ளது.

சிபிஐ

சிபிஐ கூறியதாவது, "விசாரணையின் முதற்கட்ட கட்டத்தில் சஞ்சீவ் மீது சந்தேகம் இருந்தது உண்மைதான். அவர் வேறு சில வினாத்தாள் கசிவு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால், இதிலும் அவருக்குப் பங்கு இருக்கலாம் எனக் கருதப்பட்டு பீகார் போலீஸ் எப்ஐஆரில் பெயர் சேர்க்கப்பட்டது.

ஆனால், முறையான விசாரணைக்குப் பிறகு அவருக்கும் இந்த 2024 நீட் வினாத்தாள் கசிவுக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது." எனத் தெரிவித்துள்ளது.

இருப்பினும் வேறு சில வழக்குகளில் குற்றவாளியாக உள்ளதால் அவர் தொடர்ந்து நீதித்துறை காவலில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

2026 நீட் வினாத்தாள் கசிவு

ஒருபுறம் 2024 வழக்கின் விசாரணைகள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கும் வேளையில், 2026 நீட் வினாத்தாள் கசிவு வழக்கு தொடர்பான விசாரணையைச் சிபிஐ தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து பல முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வு வினாத்தாள்களைக் கசியவிடும் நெட்வொர்க்கை உடைக்க விசாரணை விரைவாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக சிஜேபி கட்சி தலைமையில் டெல்லியில் போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் 2024 வழக்கில் முக்கிய குற்றவாளி என கருத்தப்பட்டவருக்கு சிபிஐ நற்சான்றிதழ் வழங்கியுள்ளது விவாதப்பொருளாக மாறிவருகிறது.