மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து இயங்கி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்ட நிலையில் மீண்டும் கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வர டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விமர்சிப்பவர்களை மௌனமாக்கும் முயற்சியாக தங்கள் எக்ஸ் கணக்கு மத்திய அரசால் முடக்கப்பட்டதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தளிர் அபிஜித் தீப்கே குற்றம்சாட்டினார்.
மேலும் தங்கள் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுவர்னா காந்தா ஷர்மா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதில் மத்திய அரசு சார்வில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி ஏன் கணக்கு முடக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது, நீட் மறுதேர்வை கருத்தில் கொண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த கூடாது என்பதற்காக கணக்கு முடக்கப்பட்டதாகவும் தற்போது தேர்வு முடிவடைந்ததால் இனி கணக்கை மீட்டெடுக்க தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என மேத்தா தெரிவித்தார்.
இதை கருத்தில் கொண்ட நீதிபதி ஷர்மா, கணக்கை முடக்குவதற்கான முக்கிய காரணமாக சொல்லப்பட்ட தேர்வு முடிவடைந்ததாகையால் தடையை நீக்கி கணக்கினை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட்டார்.
இதனடியே நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கடந்த 18 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது.
இதில் கடந்த 10 நாட்களாக செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதில் அவரின் உடல் எடை 7.3 கிலோ குறைந்து உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நீட் வினாத்தாள் கசிவாழ் மே 3 நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டது. இது மாண்வர்களிடையே அழுத்தத்தை ஏற்படுத்தியது.
இந்த அழுத்தத்தால் நாடு முழுவதும் 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர் என குற்றம்சாட்டியுள்ள கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, தர்மேந்திர பிராதானை மோடி இன்னும் ஏன் பாதுகாக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.