2026ஆம் ஆண்டிற்கான நேட்டோ (NATO) உச்சி மாநாடு துருக்கியின் அங்காரா நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இது இங்கு நடக்கும் இரண்டாவது முறை மாநாடாகும். அங்காராவில் உள்ள அதிபர் மாளிகை வளாகத்தில் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டே தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த உச்சி மாநாட்டில் நேட்டாவின் 32 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் ஆகிய முக்கிய தலைவர்களும் இதில் பங்கேற்கின்றனர்.
நேட்டா அம்மைப்பை கடுமையாக விமர்ச்சித்த டிரம்ப் தற்போது அந்த மாநாட்டில் பங்குபெறுகிறார். இந்த மாநாட்டில் நடைபெறும் கலந்துரையாடலில் ராணுவத்திற்கான செலவீனங்கள், ஈரான்- உக்ரைன் போர், உலகளாவிய போர், ஈரான் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளின் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
துருக்கி சென்ற டிரம்ப் அங்குள்ள அதிபர் ரெசெப் தயிப் எர்டோகனுடன் இருதரப்பு பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு குறித்து நேரடியாக ஆலோசனை நடத்துவார்.
இதனைத்தொடர்ந்து டிரம்ப் நாளை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் உக்ரைன் பாதுகாப்பு மற்றும் அமைதி உடன்படிக்கைக்கான வழிகள் குறித்து விவாதிக்கப்படும்.
அத்துடன் சிரியா அதிபர் அகமது உசேன் அல்-ஷாராவுடன் அமெரிக்கா அதிபர் டிரம்ப் இருநாடுகளுக்கிடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
நேட்டோ அமைப்பைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா மற்ற நாடுகளை விட மிக அதிக அளவில் நிதிச் செலவு செய்வதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில் டிரம்ப்பின் வலியுறுத்தலின் பேரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தி ஹேக் மாநாட்டில், உறுப்பு நாடுகள் தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5%-ஐ 2035-ஆம் ஆண்டிற்குள் இராணுவப் பாதுகாப்பிற்குச் செலவிட ஒப்புக்கொண்டன.
இந்த 5% இலக்கை எட்டாத நாடுகள் மீது அமெரிக்க ஆயுதங்களுக்கான அனுமதி மறுப்பு, இராணுவக் குறைப்பு போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடக்கும் இந்த மாநாட்டில் இது தொடர்பான வாக்குறுதிகளை நடைமுறை படுத்தவும் அதனை உடனடியாக செயல்படுத்தவும் டிரம்ப் அழுத்தம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் உக்ரைனுக்கான பாதுகாப்புச் செலவுகளையும் ஐரோப்பிய நாடுகளே அதிகம் ஏற்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
இறுதியாக செய்தியாளர் சந்திப்பு நடைபெறும். அத்துடன் இந்த உச்சி மாநாடு நிறைவு பெறவுள்ளது.