இந்தியா

வெளுத்துவாங்கும் கனமழை- மும்பைக்கு ரெட் அலர்ட்!

மணிக்கு 40–60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

மும்பையில் தென்மேற்குப் பருவமழை வழக்கமாக ஜூன் 10-ஆம் தேதியே தொடங்கும். ஆனால் இந்த ஆண்டிற்கான பருவமழை சற்று தாமதமாக நேற்றுதான் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மும்பை மண்டல மையம், மும்பை மற்றும் பால்கர் பகுதிகளுக்கு சிவப்பு உடனடி எச்சரிக்கையை விடுத்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் வெளியிடப்பட்ட எச்சரிக்கையில், இவ்விரண்டு மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மின்னல் மற்றும் தீவிரம் முதல் மிகக் தீவிரம் வரையிலான மழைப்பொழிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மணிக்கு 40–60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என மும்பை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தானே பகுதியில், இடியுடன் கூடிய மின்னல், கனமழை மற்றும் ஆங்காங்கே மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் மழைக் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.