இந்தியா

ரூ.41.75 லட்சம் மோசடி..! கப்பலில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய 12 பேர் கைது

முகமது குஃப்ரான் மற்றும் யோகோஷ் நதாஜி என்பவர்களை முக்கிய குற்றவாளிகளாக போலீசார் கைது செய்தனர்.

வெளிநாட்டு வர்த்தக கப்பல்களில் அதிக வருமானம் தரும் வேலை வாங்கி தருவதாக கூறி, வேலை தேடிய 17 பேரிடம் இருந்து ரூ.41.75 லட்சம் மோசடி செய்ததாக இரண்டு நபர்களை மும்பை போலீசார் இன்று கைது செய்தனர்.

இந்த மோசடி வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 12 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நவி மும்பையின் நெருல் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் ஒரு போலி நிறுவனத்தை மோசடி நபர்கள் நடத்தி வந்துள்ளனர்.

இவர்கள் கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரிடம் பதிவுசெய்யப்பட்ட ஆள்சேர்ப்பு உரிமம், தங்களிடம் இருப்பதாக தவறான தகவல் கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து ரூ.41,75,000 செலுத்தி தங்களை மோசடி நபர்கள் ஏமாற்றிவிட்டதாக 17 பேர் துர்பே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து முகமது குஃப்ரான் மற்றும் யோகோஷ் நதாஜி என்பவர்களை முக்கிய குற்றவாளிகளாக போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் பாரதிய நியாய சம்ஹிதா 316(5) (குற்றவியல் நம்பிக்கை மோசடி), 318(4) (மோசடி), 336(3) (போலி ஆவணம் தயாரித்தல்) மற்றும் 61(2) (குற்றவியல் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் 12 நபர்கள் மீதும் துர்பே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT