இந்தியா

மணிப்பூர் கூக்குரலிடும்போது மோடி நெற்றி கூட சுருங்கவில்லை - பிரியங்காவின் கன்னிப் பேச்சை மெச்சிய ராகுல்

நாட்டின் செல்வம், விமான நிலையங்கள் மற்றும் நிலங்கள் ஒரு தனி நபருக்கு பயனளிக்கும் வகையில் ஒப்படைக்கப்படுகின்றனஅவர்கள் கால்நடைகள் மற்றும் 'தாலி' திருடப்படுவதைப் பற்றி பேசினர்

மாலை மலர்

 இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்றைய மக்களவை கூட்டத்தில் அரசியலைப்பு மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் வயநாடு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உரையாற்றினார்.

தேர்தல் அரசியலில் முதல் முறையாக களம் கண்ட பிரியங்கா வயநாடு இடைத்தேர்தலில் வென்று முதல் முறையாக மக்களவையில் ஆற்றும் கன்னி உரை இது.

இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய அவர்,

நாட்டின் செல்வம், விமான நிலையங்கள் மற்றும் நிலங்கள் ஒரு தனி நபருக்கு பயனளிக்கும் வகையில் ஒப்படைக்கப்படுகின்றன. அதே நேரத்தில் ஏழை இந்தியர்கள் பாதிக்கப்படுகின்றனர். பொது வளங்களை இந்த அப்பட்டமான துஷ்பிரயோகம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

எதிர்க்கட்சித் தலைவர்களின் குரலை நசுக்குவதற்காக அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. இந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்.

சம்பல் மற்றும் மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. பிரதமர் தனது நெற்றியை அரசியல் சாசனத்தில் தொடுகிறார், ஆனால் சம்பல், ஹத்ராஸ்[சாமியார் விழாவில் கூட்டநெரிசல்] மற்றும் மணிப்பூரிலிருந்து நீதிக்காக கூக்குரலிடும்போது, அவரது நெற்றியில் கிஞ்சித்தும் சுருங்கவில்லை.

இது பாரத் கா சம்விதான் அல்ல [இந்தியாவின் அரசியல் சட்டம் அல்ல], சங் கா விதான்[சங்-களின் சட்டம்] என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது

ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தபோது, அவர்கள் கால்நடைகள் மற்றும் 'தாலி' திருடப்படுவதைப் பற்றி பேசினர். நாட்டில் உள்ள விவசாயிகள் அழுகிறார்கள், ஆனால் அரசாங்கம் அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சபையில் தனது தங்கையின் முதல் உரை தனது கன்னி உரையை விட சிறந்ததாக இருந்தது என பாராட்டினார்.