ஐக்கிய அரபு எமிரேட்சின் புஜைராவில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
மூன்று இந்தியர்களின் காயங்களுக்கு வழிவகுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பொதுமக்களையும் உள் கட்டமைப்புகளையும் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு உறுதியான ஆதரவை தெரிவிப்பதோடு, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அமைதியான தீர்வு காண்பதற்கான தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறது.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது, நீடித்த பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், 3 இந்தியர்களுக்கு காயத்தை ஏற்படுத்திய புஜைரா மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த மோதல்களையும், பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மற்றும் அப்பாவிப் பொதுமக்களைக் குறி வைப்பதையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தது.