இந்தியா

தேர்வு அறைக்குள் செல்வதற்கு முன் வந்த தொலைபேசி அழைப்பு.. 6 வது மாடியில் இருந்து குதித்து எம்பிஏ மாணவி தற்கொலை

அருகிலிருந்த சில மாணவர்கள் அவரைத் தடுக்க முயன்றனர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேர்வு எழுதச் சென்ற எம்பிஏ மாணவி திடீரென மேலே இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் யஷஸ்வி ரோஹிலா (23) இரண்டாம் ஆண்டு எம்பிஏ பயின்று வந்தார்.

இவர் ஜெய்ப்பூரின் குர்ஜர் கி தாடி பகுதியில் உள்ள பிரேம் நகரைச் சேர்ந்தவர் ஆவார்.

நேற்று காலை 9 மணிக்கு மேல் நடைபெறவிருந்த பருவ இடைத்தேர்விற்கு அவர் சென்றிருந்தார்.

தற்கொலை

தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன்பு அந்த மாணவிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அதைத் தொடர்ந்து அவர் பல்கலைக்கழக கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்தார். அருகிலிருந்த சில மாணவர்கள் அவரைத் தடுக்க முயன்றனர், ஆனால் அவர்களால் முடியவில்லை.

அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

விசாரணை

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சனிக்கிழமை நடைபெறவிருந்த தேர்வை பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.

யஷஸ்வியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வரும் காவல்துறை, அவர் கடைசியாக யாரிடம் பேசினார் என்பதை கண்டறிய முயன்று வருகின்றனர்.

இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தீர்வல்ல

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். தற்கொலை எண்ணங்கள், மனநல பிரச்சனைகளில் இருந்து விடுபட, உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரமும் செயல்படும்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம் செயல்படும்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண் – 1800-599-0019

SCROLL FOR NEXT