மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழி 10ம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளதை மாநில அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதத்திற்குப் பதிலளித்த அம்மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் தாதா பூசே,
“மகாராஷ்டிரா பள்ளிகளில் மராத்தி மொழியைக் கட்டாயக் கற்பித்தல் மற்றும் கற்றல் சட்டம்'- 2020இன் கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்து மொழிவழிப் பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை மராத்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையை எந்த பள்ளியாவது செயல்படுத்தத் தவறினால், முதலில் தவறை திருத்திக்கொள்ள கூறப்படும். மீண்டும் நடந்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமுறைகளைப் பின்பற்றாத பட்சத்தில், ஏப்ரல் 17 அன்று வெளியிடப்பட்ட அரசாணைப்படி, அப்பள்ளியின் அங்கீகாரம் ரத்துச் செய்யப்படும்.
அனைத்து வகுப்புகளுக்கும் மராத்தித் தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும்.” என தெரிவித்தார்.