சசி தரூர்
இந்தியா

மக்களவை எம்.பி. 850 ஆக உயர்ந்தால் வெறும் கைதட்டிவிட்டுச் செல்லும் நிலைதான் ஏற்படும்: சசி தரூர்

தொகுதி மறுவரையறை மூலமாக மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 850 ஆக உயர உள்ளது.

மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தும் மத்திய அரசின் திட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கவலை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தற்போது சுமார் 540 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையிலேயே அனைத்து எம்.பி.க்களுக்கும் பேசுவதற்குப் போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை

மத்திய அமைச்சர்களிடம் கேள்வி கேட்பது, தங்களது தொகுதி மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பது, பூஜ்ஜிய நேரத்தில் பேசுவது போன்றவற்றுக்கே தற்போதுள்ள உறுப்பினர்களுக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை.

வெறுமனே கைதட்டிவிட்டுச் செல்லும் நிலை

இந்நிலையில், உறுப்பினர்களின் எண்ணிக்கை 815 ஆக உயர்ந்தால், பலர் அவைக்கு வந்து வெறுமனே கைதட்டிவிட்டுச் செல்லும் நிலை ஏற்படும்.

மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதா உண்மையிலேயே நாட்டின் நலனுக்காகவா அல்லது அரசியல் ஆதாயத்திற்காகவா?

இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.

மக்களவை இடங்கள் 850 இடங்களாக உயர்கிறது

தொகுதி மறுவரையின்படி மாநிலங்களுக்கு 815 இடங்களும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 இடங்களும் என மக்களவையின் அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 850 ஆக உயர்த்தப்படலாம். நவம்பர் 30 முதல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இந்த விவகாரம் முக்கிய விவாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT