கடத்தல்
மணிப்பூரில் கடந்த மே மே 13 ஆம் தேதி குக்கி ஆயுதக் குழுவால் கடத்தப்பட்டு காணாமல் போன நாகா சமூகத்தைச் சேர்ந்த 6 ஆண்கள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் காங்போக்பி மாவட்டத்தின் கராம் வைபேய் கிராமத்தை ஒட்டியுள்ள அடர்ந்த மலைக்காட்டுப் பகுதியில் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டதாக அம்மாநிலக் காவல் துறை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
தேடுதல் வேட்டை
சுமார் 450 வீரர்கள், 15 தனிப்படைகளாகப் பிரிந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகத் மோப்ப நாய்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்களின் உதவியோடு நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையின் முடிவில் இந்த உடல்கள் மீட்கப்பட்டன.
உடல்கள் அனைத்தும் டிஎன்ஏ பரிசோதனை மற்றும் பிரேதப் பரிசோதனைக்காக இம்பாலில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த கொலைகளை கண்டித்து நாகா சமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் கண்டனம்
அப்பாவி மக்களைக் கொன்ற குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என அம்மாநில ஆளும் பாஜக அரசின் முதல்வர் யும்நம் கேமசந்த் சிங் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மணிப்பூர் நாகா அமைப்புகள் மாநிலத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால், கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.