மணிப்பூர் 
இந்தியா

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை.. 2 பேர் கொலை - 30 வீடுகள் தீயிட்டு எரிப்பு

7 பேரும் சடலங்கமாக கண்டெடுக்கப்பட்டனர்.

மணிப்பூரில் கடந்த மே 13 அன்று காங்டோபி மாவட்டத்தில் லெய்லோன் என்ற கிராமத்திலிருந்து 7 நாகா சமூக இளைஞர்கள் குக்கி ஆயுதக்குழுவால் கடத்தப்பட்டனர்.

29 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டையின் பின் நேற்று முன் தினம் காங்பேய் என்ற கிராம மலைக்காட்டுப் பகுதியில் அவர்கள் 7 பேரும் சடலங்கமாக கண்டெடுக்கப்பட்டனர்.

வன்முறை

இந்த சம்பவம் மணிப்பூரில் மீண்டும் கொந்தளிப்பான சூழலை உருவாகியுள்ளது. நாகா சமூக மக்கள் மற்றும் அமைப்புகள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் அமைதியான போராட்டம் வன்முறையாக மாறி சுமார் 30 வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டன.

குக்கி சமூகத்தை சேர்ந்த இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மணிப்பூரில் காமஜோங் மாவட்டத்தில் குக்கி சமூகத்தினர் வாழும் குல்டா என்ற கிராமத்தில் இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது.

நிலைமையை கட்டுப்படுத்த அவ்விடத்திற்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டன. இதேபோல சேனாபடி மாவட்டத்தில் உள்ள கரோங் பகுதியில் மக்கள் சாலையில் சென்ற சரக்கு வாகனத்திற்கு தீவைத்தனர்.

நாகா மக்கள் முன்னணி அமைப்பின் அலுவலகம் ஒன்று சூறையாடப்பட்டது. தமேன்க்ளோங் மாவட்டத்தின் தாமேய் பகுதியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

713 பேர் பலி

மணிப்பூரில் கடந்த 2023 இல் இனக்குழுக்களுக்கு இடையேயான கலவரத்தின்போது 250 பேர் வரை கொல்லப்பட்டனர்.

கலவரத்தின் பின் இடம்பெயர்ந்தவர்களின் தற்போதுவரை 713 பேர் உயிரிழந்துள்ளனர்.

43,676 மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தற்காலிக முகமகளில் 3 ஆண்டுகளாக மோசமான சூழ்நிலைகளில் மருத்துவம் உள்ளிட்ட அத்தியவசிய உதவிகள் இன்றி தவித்து வருகின்றனர்.