பெங்களூரு கள்ளக்காதல்
இந்தியா

பெண் வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்த பழைய காதலன்: அதேநேரத்தில் வந்த புதிய காதலன்- அடுத்து நடந்தது என்ன?

திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் வீட்டிற்குள் ஒரே நேரத்தில் இரண்டு ஆண்கள் புகுந்ததால், அடிதடி ஏற்பட்டு ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் என்.ஆர். புரா தாலுகாவில் உள்ள பலேஹானர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. ஆனால், கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கணவரை பிரிந்து தனியாக வசித்து வருவதால், முன்னாள் காதலருடன் தொடர்ந்து இருந்ததாக தெரிகிறது. அதேவேளையில் புதிதாக ஒரு ஆண் நண்பருடனும் பழகி வந்துள்ளார்.

சம்பவத்தன்று முன்னாள் காதலன், அந்த பெண்மணி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது புதிய ஆண் நண்பரும் அங்கு வந்துள்ளார். என்னடா இது.., நாம் பழகும் பெண் வீட்டிற்குள், அதுவும் இரவு நேரத்தில் மற்றொருவன் என புதிய ஆண் நண்பன், வீட்டிற்கு வந்த பழைய காதலனை தட்டிக் கேட்டுள்ளார். அத்துடன் கூர்மையான ஆயுதத்தால் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் பழைய காதலன் படுகாயம் அடைந்துள்ளார். உடனே அவர் மீட்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், பெரிய அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட புதிய நண்பரை போலீசார் தேடிவருகின்றனர்.

திருமணமாகி கணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கான இருவர் சண்டைபோட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்தது வியப்புடன் கூட சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.