இந்தியா

ஆந்திர தலைநகர் அமராவதியில் ரூ.140 கோடியில் ஏழுமலையான் கோவில்

அடுத்த கட்டத்தில் கலையரங்கம், பக்தர்கள் தங்கும் ஓய்வு கூடம் கட்டுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநிலம் அமராவதியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.140 கோடி செலவில் பிரம்மாண்டமான முறையில் ஏழுமலையான் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது.

கோவில் கட்டுமான பணிக்காக அமராவதி வெங்கட பாலத்தில் உள்ள அணுகு சாலையில் இருந்து கிருஷ்ணா நதிக்கரை இடையே 25 ஏக்கர் நிலப்பரப்பை கடந்த 2019-ம் ஆண்டு அப்போதைய சந்திரபாபு நாயுடு அரசு ஒதுக்கியது. அதனை தொடர்ந்து பிரதான கோவிலின் கட்டுமான பணிகள் தொடங்கியது.

ரூ.36 கோடி செலவில் ஒரே ஒரு ராஜகோபுரத்துடன் கோவில் கொடிமரம் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. பின்னர் பொறுப்பேற்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் பணிகள் நிறுத்தப்பட்டன.

தற்போது மீண்டும் கோவில் கட்டிட பணி தொடங்கி உள்ளது. ஏழு அடுக்கு மகாராஜ கோபுரம், 4 கோபுரங்கள் பல மண்டபங்கள் கொண்ட வெளிப்புற சுவர் கட்டுமான பணி தொடங்கி உள்ளது.

அடுத்த கட்டத்தில் கலையரங்கம், பக்தர்கள் தங்கும் ஓய்வு கூடம் கட்டுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மேலும் ரூ.150 கோடி செலவாகும் என கூறப்படுகிறது.

கட்டுமான பணிக்கு தேவையான கற்கள் தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல்லில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.