கெஜ்ரிவால்
இந்தியா

நன்கொடை பணத்திலா கை வைத்தீர்கள்: கடவுள் ராமரே உங்களை வெளியேற்றுவார்: பாஜக-வை விமர்சித்த கெஜ்ரிவால்

அயோத்தி கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்படும் பணத்தை கொள்ளையடித்த 8 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அயோத்தி ராமர் கோவிலில் நன்கொடை வழக்கப்பட்ட பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. இந்த நிலையில், அயோத்தி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக-வை சாடியுள்ளார்.

இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ இல்லையோ, சட்டம் தன் கடமையைச் செய்வதை நாங்கள் உறுதி செய்வோம். இதற்குப் பொறுப்பானவர்களைப் பகவான் ராமரும் தண்டிப்பார். நன்கொடைத் திருடர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்கள் சமூக ரீதியாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். இல்லையெனில், நீங்களும் இந்த பாவத்தில் பங்காளிகளாவீர்கள்.

அவர்கள் (பாஜக) பகவான் ராமரின் பெயரால் ஆட்சிக்கு வந்தார்கள். இப்போது ராமரே அவர்களை வெளியேற்றுவார்.

அந்த அரக்கர்கள் தூக்கிலிடப்படும் வரை தான் ஓயமாட்டேன். 8 பேர் கைது செய்யப்பட்டது ஒரு கண்துடைப்பு நாடகம். எட்டு கீழ்நிலை ஊழியர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற முயற்சிகள் நடக்கின்றன.

இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT