cm வி.டி.சதீசன்  
இந்தியா

"ஆபரேஷன் டூஃபான்"- அதிரடி காட்டுமா தமிழ்நாடு?- முதலமைச்சர் விஜய்க்கு கேரள முதல்வர் கடிதம்!

மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டு நடவடிக்கைக்கு முதலமைச்சர் விஜய்க்கு கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் கடிதம்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை ஒழிப்பதற்காக "ஆபரேஷன் டூஃபான்" எனும் திட்டத்தை கேரள அரசு அறிமுகம் செய்தது. இது மாநில அளவிலான மாபெரும் போதைப்பொருள் எதிர்ப்பு சிறப்பு நடவடிக்கையாகும்.

இதன் மூலம் கேரளாவுக்குள் நுழையும் மாநிலங்களுக்கு இடையேயான லாரிகள் மற்றும் வாகனங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை தடுக்க, மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டு நடவடிக்கைக்கு கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது,

கேரளாவின் போதைப்பொருள் ஒழிப்பு இயக்கமான ஆபரேஷன்தூஃபானை வலுப்படுத்தவும், மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளைத் தகர்க்கவும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடக முதலமைசர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

மேம்பட்ட ஒருங்கிணைப்பை நாடி, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு நிகழ்நேர உளவுத் தகவல் பகிர்வு, கூட்டு நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த திட்டமிடல் ஆகியவை இன்றியமையாதவை.

ஒரு கூட்டுச் செயல் திட்டத்தை வகுக்கவும், போதைப்பொருட்களுக்கு எதிரான கூட்டுப் போராட்டத்தை உறுதி செய்யவும் ஒரு உயர்மட்டக் கூட்டத்தை முன்மொழிந்துள்ளேன். மாநில காவல்துறைத் தலைவர் ரவடா சந்திரசேகர் மற்றும் தந்திரோபாயத் தளபதி புட்டா விமலாதித்யா ஆகியோர் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலாவின் தலைமையில் மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான ஒருங்கிணைந்த முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில்,
கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உள்துறை உயர் அதிகாரிகளுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துரையாடல் நடத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT