14 வயதுடைய ஐந்து சிறுவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், கர்நாடக மாநிலம் மங்களூரு வாலென்சியாவில் உள்ள புனித வின்சென்ட் ஃபெரர் தேவாலயத்தின் பாதிரியார் சிப்ரியன் பின்டோவை மங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.
பாதிரியார் பின்டோவை அவரது உறவினர் வீட்டில் வைத்து போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு பிறகு இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிரியார் சைப்ரியன் பின்டோ 1988-ஆம் ஆண்டு முதல் பாதிரியாராகப் பணியாற்றி வருகிறாரர். இந்த நிலையில் சிறுவரக்ளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் போக்சோ சட்டம்பிரிவுகள் 8 மற்றும் 10 மற்றும் பாரதிய நியாய சகிதா (BNS - பிரிவு 75(2) ஆகியவற்றின் கீழ் மங்களூரு தெற்கு காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்துமாறு, பெங்களூருவில் உள்ள கர்நாடக குழந்தைகள் பாதுகாப்பு இயக்குநரகம், தட்சிண கன்னட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவுக்கு (DCPU) ஆகஸ்ட் 31 அன்று கடிதம் எழுதியது.
மைசூரைச் சோ்ந்த ஓடனாடி என்ற தன்னாா்வ அமைப்பு, இந்த விவகாரத்தை மங்களூரு காவல் ஆணையா் சுதீா் குமாா் ரெட்டியின் கவனத்துக்குக் கொண்டு சென்றதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவா்களைச் சந்தித்து புகாா் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் குறைந்தது 5 சிறுவா்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவா்களின் பெற்றோா்கள் மாநில குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகாா் கடிதங்கள் எழுதிய போதிலும் அரசு சாா்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடா்ந்து பெற்றோா்கள் தன்னாா்வ அமைப்பின் உதவியை நாடினா்.அந்த புகாரை எழுதிய சிறுவன் தான் எவ்வாறு துன்புறுத்தப்பட்டேன் என்பதையும் , மற்றொரு சிறுவன் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது அதனை நேரில் பார்த்ததாகவும் விவரித்துள்ளார்.
இதுகுறித்து ஓடனாடி அமைப்பின் இணை நிறுவனா் கே.வி. ஸ்டான்லி , இந்த விவகாரம் கடந்த ஆகஸ்ட் மாதமே மங்களூரு மறைமாவட்டத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், புகாரை உரிய அதிகாரிகளிடம் தெரிவிப்பதற்குப் பதிலாக, உள்நிலை விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பாதிரியாா் நிா்வாக விடுப்பில் அனுப்பப்பட்டதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.
பின்னா் ஓடனாடி தன்னாா்வ அமைப்பு இந்த விவகாரத்தை மங்களூரு காவல் ஆணையா் முன்பு எடுத்துச் சென்றனா். காவல் ஆணையா் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் உறவினர் வீட்டில் அவர் இருந்தபோது காவல்துறை அவரை கைது செய்துள்ளது.
இந்த வழக்கில் குறைந்தது ஐந்து சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், புகார்களின் உண்மைத்தன்மை, சம்பவங்களின் பின்னணி மற்றும் இதற்கு முன்பு அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து விசாரணை நடைபெற வேண்டியுள்ளது
சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் புகார்களுக்கு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இந்தச் சம்பவம் முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளது. விசாரணையின் முடிவுகளும் நீதிமன்ற நடவடிக்கைகளுமே குற்றச்சாட்டுகள் குறித்த இறுதி முடிவைத் தீர்மானிக்கும்.