ஜம்மு காஷ்மீர் மாநிலம் பகதூர்பூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சந்தேகத்திற்குரிய பொட்டலம் ஒன்றை எடுத்த விவசாயி அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதையடுத்து கைப்பற்றப்பட்ட பொட்டலத்தில் 1.5 கிலோ முதல் 2 கிலோகிராம் வரை எடை கொண்ட ஹெராயின் போதைப்பொருள் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடத்தல் கும்பல்கள் எல்லை பாதுகாப்பு சோதனைகளை தவிர்ப்பதற்காக ட்ரோன்கள் மூலம் போதைப்பொருளை கடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ள தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு போதைப்பொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய எல்லையில் ட்ரோன்கள் மூலம் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தி உள்ளதாகவும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.