மத்திய கிழக்கில் இருந்து 'ஜக் லட்கி' என்ற இந்திய எண்ணெய் கப்பல், பெருமளவு கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்கு இன்று வந்தடைந்தது.
முன்னதாக, ஈரான் உறுதியளித்ததால் இந்தியாவின் இரண்டு எல்பிஜி கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து இந்தியா வந்தடைந்தது.
இன்று வந்து சேர்ந்துள்ள 'ஜக் லட்கி' எண்ணெய்க் கப்பல், சுமார் 80,886 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றி வந்துள்ளது.
இந்த சரக்கானது கடந்த மார்ச் 14 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்திலிருந்து ஏற்றப்பட்டது.
அங்கு எண்ணெய் முனையம் தாக்கப்பட்டபோது கப்பல் ஆபத்தில் இருந்து தப்பிய நிலையில் தற்போது பத்திரமாக இந்தியா வந்துள்ளது.
இதற்கிடைய ஆக்வா டைட்டன் என்ற ரஷிய எண்ணெய் கப்பல் சீனா செல்லும் வழியில் இந்தியாவை நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளது.