சீனாவுக்கு செல்லும் வழியில் யு-டர்ன் அடித்த ரஷிய எண்ணெய் கப்பல் - இந்தியாவுக்கு வருகிறது | Russian oil

இந்தக் கப்பல் முதலில் சீனாவின் ரிஷாவோ துறைமுகத்திற்கு செல்லவிருந்தது.
சீனாவுக்கு செல்லும் வழியில் யு-டர்ன் அடித்த ரஷிய எண்ணெய் கப்பல் - இந்தியாவுக்கு வருகிறது | Russian oil
Published on

சீனாவிற்கு சென்றுகொண்டிருந்த ரஷிய எண்ணெய் கப்பலான 'அக்வா டைட்டன்' இந்தியாவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் பால்டிக் கடல் துறைமுகத்தில் இந்தக் கப்பலில் கச்சா எண்ணெய் ஏற்றப்பட்டது. இந்தக் கப்பல் முதலில் சீனாவின் ரிஷாவோ துறைமுகத்திற்கு செல்லவிருந்தது.

சீனாவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கப்பல் தென் சீனக் கடல் பகுதியில் இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ளது.

அமெரிக்காவுடன் கைழுத்திட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா, ரஷிய எண்ணெய்யை வாங்க கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ரஷிய எண்ணெய் வாங்க 30 நாட்களுக்கு மட்டும் இந்தியாவுக்கு தற்காலிகமாக அனுமதி வழங்குவதாக தெரிவித்தது.

இதன் ஒரு பகுதியாக இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷியாவிலிருந்து 30 மில்லியன் பீப்பாய் எண்ணெயை வாங்கியுள்ளன.

இந்த வரிசையில், அக்வாடைட்டன் கப்பல் மார்ச் 21 அன்று கர்நாடகாவின் நியூ மங்களூரை வந்தடையும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com