இந்தியா

Share Market | கடந்த 6 மாதத்தில் இல்லாத அளவிற்கு இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன. கடந்த ஒரு வார காலமாக பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.

இன்று (புதன்கிழமை) மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. நேற்று ஓரளவு உயர்வை சந்தித்த நிலையில் இன்று பங்குச்சந்தை சரிவை கண்டதால் முதலீட்டாளர்கள் பீதி அடைந்தனர்.

கடந்த 6 மாதத்தில் இல்லாத மிகப்பெரிய வீழ்ச்சியை இந்திய பங்குச்சந்தை தற்போது சந்தித்துள்ளது.

இன்று சென்செக்ஸ் 1342 புள்ளிகள் குறைந்து 76,863 என்ற நிலைக்கு வந்தது. நிஃப்டி சுமார் 394 புள்ளிகள் வரை சரிந்து 23,866 புள்ளிகள் என்ற நிலைக்குச் சென்றது.

ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதல் உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளன. இதனால் கடந்த ஒரு காலமாக பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.

SCROLL FOR NEXT