இந்தியாவில் தரவு பகுப்பாய்வு நிறுவனமான பிரைஸ் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து நாட்டின் சராசரி குடும்ப வருமானம் குறித்து விரிவான ஆய்வு ஒன்றை நடத்தியது.
‘பல நகர்ப்புற இந்தியர்கள்' (Many Urban Indians) என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, நாட்டின் முதல் ஆறு நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகியவை இணைந்து மொத்த நுகர்வில் 46 சதவீதத்தையும், நகர்ப்புற நுகர்வில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டுள்ளன என்பதைக் கண்டறிந்துள்ளது.
126 பில்லியன் டாலர் நுகர்வுடன் நாட்டின் மிகப்பெரிய ஒற்றை நுகர்வுத் தளமாக தேசிய தலைநகர் டெல்லி உருவெடுத்துள்ளது.
மும்பையில் 4.6 மில்லியன் குடும்பங்கள் வசிக்கும் நிலையில், டெல்லியில் 7.5 மில்லியன் குடும்பங்கள் வசிப்பதே இதற்கு காரணம் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த ஆய்வில் சிறிய நகர்ப்புற மையமான சண்டிகர், வருமானம் மற்றும் செலவினம் ஆகிய இரண்டிலும் அளவுக்கு மீறிய பங்களிப்பை அளிக்கின்றது.
குடும்ப நுகர்வுக்கான முதல் ஐந்து நகரங்களில், இந்தியாவின் ஆறு மிகப்பெரிய பெரு நகர மையங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் மற்றும் கொல்கத்தா என எதுவும் இடம்பெறவில்லை.
ஆனால் திருப்பூர் மற்றும் சூரத் போன்ற சிறிய நகரங்கள் மிகப்பெரிய நுகர்வு ஆற்றல் உற்பத்தி மையங்களாக மாறி வருகின்றன. ஒரு வீட்டிற்கான சராசரி அதிகமாக இல்லாவிட்டாலும், ஆறு பெரு நகரங்கள் ஒட்டுமொத்த சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
மேலும் அவை நாட்டின் மக்கள்தொகையில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே கொண்டிருந்தாலும், மொத்த நகர்ப்புற நுகர்வில் சுமார் 46% பங்களிக்கின்றன.
பெங்களூரு மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்கள் ஆண்டுக்கு சராசரியாக சுமார் ரூ.28 லட்சத்துடன், நாட்டின் சராசரி குடும்ப வருமான பட்டியலில் முன்னிலையில் உள்ளது. இது பெரும்பாலும் வருமானம் சார்ந்த ஒரு ஆய்வாக உள்ளது.
ஆனால் சராசரி குடும்ப செலவினங்களை பொறுத்தவரை, திருப்பூர், சண்டிகர், திருவனந்தபுரம் மற்றும் வதோதரா ஆகியவை ஒரு குடும்பத்திற்கான செலவின் அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய செலவாளர்களாக இடம்பிடித்துள்ளன.
வளர்ச்சிப் பாதையில் உள்ள நகரங்களில், 18 சதவீத குடும்பங்கள் மட்டுமே கார்களை சொந்தமாக கொண்டுள்ளனர். அதே சமயம் கால்(1/4) சதவீதத்தினர் மட்டுமே சலவை இயந்திரங்கள் மற்றும் குளிரூட்டிகளை சொந்தமாக கொண்டுள்ளனர் எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.