இந்தியா

ஜூலை 01 முதல் பெட்ரோல், டீசல் விற்பனை மீதான கட்டுப்பாடுகள் நீக்கம் - மத்திய அரசு அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விற்பனை மற்றும் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேற்காசிய போர் காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் மத்திய அரசு கட்டுப்பாடுகளை பிறப்பித்தது.

பெட்ரோல், டீசல் விற்பனை மற்றும் விநியோகம் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதாக மத்திய அரசு அறிவத்துள்ளது.

மத்திய அரசு அறிக்கை:

இது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், "பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை, விநியோகம் போன்ற தற்காலிக ஒழுங்குமுறை நடவடிக்கைகளை ஜூலை 01-ஆம் தேதி முதல் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை திரும்பப் பெறுகிறது.

பெட்ரோலிய பொருள்கள் விநியோகத்தின் மீதான ஆய்வைத் தொடர்ந்து மக்கள் நலனுக்காக பிறப்பிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஜூன் 12-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஜூலை 01-ஆம் முதல் திரும்பப் பெறப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் விதமாக ஜூன் 12-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விற்பனை மற்றும் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.