இந்தியா

16வது வருடாந்திர உச்சி மாநாடு: ஜப்பானிய பிரதமர் டெல்லி வருகை

பிரதமர் சானே டகாயிச்சி, மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று மாலை டெல்லி வந்தடையவுள்ளார்.

இந்தியா-ஜப்பான் இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு இந்த மாதம் நடைபெற உள்ளது. இந்த 16வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறவுள்ளது. கடந்த 15-வது உச்சி மாநாடு 2025 ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடைபெற்றது.

இந்த 16வது உச்சி மாநாடு இன்று தொடங்கி ஜூலை 3 வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க ஜப்பானிய பிரதமர் சானே டகாயிச்சி, மூன்று நாள் அரசுமுறை பயணமாக இன்று மாலை டெல்லி வந்தடையவுள்ளார்.

இது இரு நாடுகளுக்கிடையே, பரஸ்பர உறவுகளை மேம்படுத்தும் மிக முக்கியமான இருதரப்பு அரசுமுறை சந்திப்பாகும். மேலும் டகாயிச்சியின் இந்தியப் பயணம், முதலீடு மற்றும் புத்தாக்க வாய்ப்புகளை அதிகரிக்கவும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் குறைக்கடத்திகள் மற்றும் கனிமங்கள் போன்ற துறைகளில் மீள்திறன் கொண்ட விநியோகங்களை கடமைப்பதற்கான முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்திடுதல், பாதுகாப்புத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வங்காள விரிகுடாவையும் வடகிழக்கு இந்தியாவையும் இன்னைக்கும் கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகிவற்றில் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டகாயிச்சி முன்வைத்த இந்தோ- பசிபிக் கொள்கையை முன்னெடுத்து செல்வதில் இந்தியா மிகப்பெரும் பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் இந்த பயணத்திதில் சீயக்காய் நுண்ணறிவு ஒத்துழைப்பு தொடர்பாக அறிவிக்கப்படலாம் என்றும் வல்லுநர்கள் தகவல்கள் தெரிவித்து வருகின்றார்.

இது குறித்து ஜப்பானின் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜப்பான் பிரதமர் டகைச்சி சானே, ஜூலை 1 முதல் 3 வரை இந்தியாவிற்கு வருகை தந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜப்பான்-இந்தியா உச்சிமாநாட்டுக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.

'சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்' என்பதை நனவாக்குவதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்தும் பொருட்டு, இந்தப் பயணத்தின் மூலம், எரிசக்தி உள்ளிட்ட பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் முதலீடு, புத்தாக்கம் மூலமான பொருளாதார வளர்ச்சி ஆகிய துறைகளில், கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடியின் ஜப்பான் பயணத்தின்போது அறிவிக்கப்பட்ட 'அடுத்த பத்தாண்டுகளுக்கான ஜப்பான்-இந்தியா கூட்டு தொலைநோக்குப் பார்வை'யின் கீழ் பரஸ்பரம் ஒன்றையொன்று பூர்த்திசெய்யும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள்.

இவ்வாறு கூறப்பட்டிருந்தது.