கிரேட்டர் நிகோபார் திட்ட சர்ச்சை, உச்சநீதிமன்றம் 
இந்தியா

கிரேட்டர் நிகோபார் திட்ட சர்ச்சை.. பொதுநல வழக்குக்கு எதிரான மத்திய அரசின் மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்

உள்ளூர் பழங்குடியின மக்களின் உரிமைகள் போதுமான அளவு கவனத்தில் கொள்ளப்படவில்லை

ரூ.72,000 கோடி செலவில் அந்தமான் நிகோபார் தீவுகளில் மத்திய அரசு மேற்கொள்ள உள்ள கிரேட்டர் நிகோபார் திட்டம் பல தரப்பிலும் எதிர்ப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் இதில் கருத்து தெரிவித்துள்ளது.

கிரேட்டர் நிகோபார் திட்டத்தின் கீழ் அந்தமான் நிக்கோபாரில் ஒரு டிரான்ஸ்-ஷிப்மென்ட் சரக்கு துறைமுகம், ஒரு சர்வதேச விமான நிலையம், ஒரு டவுன்ஷிப் மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட உள்ளது. அதானி குழுமத்தின் அதானி போர்ட்ஸ் இந்த திட்டிற்கான டெண்டரை பெற ஆர்வம் காட்டி வருகிறது.

பொதுநல வழக்கு

கிரேட் நிக்கோபார் திட்டத்திற்காக வன நிலத்தை ஒதுக்கும்போது, ​​2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ளூர் பழங்குடியின மக்களின் உரிமைகள் போதுமான அளவு கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றும், விதிகளை மீறி ஒப்புதல் பெறப்பட்டது என்றும் குற்றம் சாட்டி கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரிக்க கல்கத்தா உயர் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு

இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.

இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி, "நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இந்தத் திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்று வாதிட்டிருந்தார்.

மறுப்பு

இருப்பினும், தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜெயமால்ய பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு அந்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்டது.

இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதைக் குறிப்பிட்ட அமர்வு, நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் விசாரணையின்போது நிலுவையில் உள்ள மனுக்களை விசாரிக்குமாறு கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் நிலைப்பாட்டை காங்கிரஸ் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வரவேற்றதோடு, மோடி அரசின் 'யுக்தியை' உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்றும் கூறினார்.

SCROLL FOR NEXT