Gas Cylinder 
இந்தியா

Gas Cylinder | தட்டுப்பாடால் சிலிண்டர் முன்பதிவில் மாற்றமா? - மத்திய அரசு விளக்கம்

ஈரான் போரால் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க போர் இன்று 24வது நாளை எட்டியள்ளது. உலகின் எண்ணெய், எரிவாயு வர்த்தக கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் இந்த போர் உலகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தவும், விநியோகத்தைச் சீர்செய்யவும் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சிலிண்டர்களை முன்பதிவு செய்வதில் புதிய கட்டுப்பாட்டை மத்திய அரசு அமல்படுத்தியது.

அதாவது நகர்ப்புறங்களில் ஒரு சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்ட பிறகு, அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய குறைந்தபட்சம் 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். (முன்பு இது 15 முதல் 21 நாட்களாக இருந்தது).

அது போல் கிராமப்புறங்களில் ரு சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்ட பிறகு, அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய குறைந்தபட்சம் 45 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான நாட்கள் இடைவெளி நீடிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் பரவியது. இதையடுத்து பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இந்நிலையில் இணையத்தில் பரவும் தகவல் உண்மையில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நகர்ப்புறங்களில் 25 நாட்கள் மற்றும் கிராமப்புறங்களில் 45 நாட்கள் என்ற இடைவெளி மட்டுமே தொடர்வாக மாத்திரை அரசு கூறியுள்ளது.

SCROLL FOR NEXT