கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. சதீசன் தலைமையிலான அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டில் பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து AIYF மற்றும் AISF இணைந்து பேராட்டம் நடத்தியது. அப்போது போலீசார் அவர்களுக்கு மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். பீய்ச்சி அடிக்கப்பட்ட தண்ணீர் மாசுபட்ட நீர் எனக் கூறப்படுகிறது. அந்த மாசுபட்ட நீர் உடன் பினராயி விஜய் சட்டசபைக்கு வந்தார்.
அப்போது சட்டசபை விவாதத்தின்போது பினராயி விஜயன் பேசியதாவது:-
PM SHRI திட்டத்தை செயல்படுத்துவதை எதிர்த்து AIYF மற்றும் AISF ஆகிய அமைப்புகள் இன்று சட்டமன்றத்தை நோக்கி கூட்டாக ஒரு போராட்ட ஊர்வலத்தை நடத்தின. இந்த ஊர்வலத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அவ்வாறு பயன்படுத்தப்பட்ட நீர் மாசுபட்டதாக இருந்தது. இன்று காலை சட்டமன்றத்தில் மிகத் தீவிரமான உடல்நல பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
காவல்துறையினர் பயன்படுத்திய அந்த மாசுபட்ட நீர், அமீபிக் மெனிங்கோஎன்செபலிடிஸ் (amoebic meningoencephalitis) உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தக்கூடிய தன்மையைக் கொண்டது. இத்தகைய நீரைப் பயன்படுத்துவதற்கான காரணம் என்ன? சாதாரண நீரையே பயன்படுத்தியிருக்கலாமே. இது அரசாங்கம் தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விவகாரமாகும். இவ்விஷயம் குறித்து உள்துறை அமைச்சர் என்ன கூறப்போகிறார்?
இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.