இந்தியா

பாஜக சார்பில் போட்டியிட வற்புறுத்திய ஞானேஷ் குமார்.. கேரள முன்னாள் தேர்தல் ஆணையர் பகீர் குற்றச்சாட்டு

பதவியில் இருக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுமாறு வேட்பாளர்களுக்கு எந்தத் தகுதியில் ஆலோசனை வழங்குகிறார்?

கேரளாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிஜி தாம்சன், ஞானேஷ் குமார் குறித்து ஒரு முக்கியக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையின் போது, ​​இரண்டு தேர்தல் ஆணையர்கள் தங்கள் பெயர்களில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.

இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன.

ஜிஜி தாம்சன்

இந்நிலையில் கேரளாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜிஜி தாம்சன், ஞானேஷ் குமார் குறித்து ஒரு முக்கியக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தாம்சனின் கூற்றுப்படி, 2016ஆம் ஆண்டு டெல்லிக்குச் சென்ற விமானப் பயணத்தின்போது, ​​2019 மக்களவை தேர்தலில் பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராகலாம் என அப்போது டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் கேரள அரசின் குடியிருப்பு ஆணையராக இருந்த ஞானேஷ் குமார் வற்புறுத்தி கூறியுள்ளார்.

ஆனால், தாம்சன் அரசியலில் நுழையத் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

ராகுல் காந்தி

இந்த குற்றச்சாட்டு குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, ஞானேஷ் குமார் முதலில் பாஜகவில் ஆள்சேர்ப்புக்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும், பின்னர் தேர்தல் முடிவுகளை முறைகேடாகக் கையாள்வதற்காக மோடி மற்றும் ஷாவால் நடுவராக நியமிக்கப்பட்டதாகவும் சாடியுள்ளார்.

பதவியில் இருக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுமாறு வேட்பாளர்களுக்கு எந்தத் தகுதியில் ஆலோசனை வழங்குகிறார் என்று கேரள காங்கிரஸும் கேள்வி எழுப்பியுள்ளது.

SCROLL FOR NEXT