மம்தா பானர்ஜி
இந்தியா

மம்தா பானர்ஜி தரப்புக்கு புதிய கட்சி பெயர், சின்னம்: தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இரதரப்பினரும் சண்டையிட்டதால் பெயர், சின்னம் முடக்கம்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. அதன்பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. சுமார் 60 எம்.எல்.ஏ.-க்கள் (மூன்றில் இரண்டு பங்கு) தனியாக செயல்பட முடிவு செய்தனர். இவர்கள் அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்பில் செயல்பட தொடங்கினர்.

அதேவேளையில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என மம்தா பானர்ஜி தரப்பு கூறி வந்தது. இதற்கிடையே, திரிணாமுல் கட்சி எம்.பி.க்கள் 20 பேர், வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்.

இடைத்தேர்தல்

மேற்கு வங்க மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தின் முறையிடப்பட்டனர். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் (இரட்டைப் பூக்கள்) சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ்

இந்த நிலையில் இரண்டு தரப்பிலும் பரிந்துரை செய்த கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மம்தா பிரிவுக்கு மம்தா அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அத்துடன் கால்பந்து வீரர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்

அரூப் ராய், ரிதப்ரதா பானர்ஜி தரப்புக்கு ஜனநாயக அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய பெயரை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த தரப்புக்கு அஞ்சல் உறை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட இந்த கட்சியின் பெயரில் இருதரப்பினரும் செயல்படுவார்கள்.

மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால், கட்சிக்கு உரிமை கொண்டாடும் தரப்பிற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT