டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம் 7 லோக் கல்யாண் மார்க்) அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரேஸ் கோர்ஸ் பள்ளிவாசல்-ஐ காலி செய்யுமாறு மத்திய அரசின் நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (L&DO) அக்டோபர் 19, 2026 அன்று மாலையில் 6 நாட்கள் கெடு விதித்து வெளியேற்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி மாநகராட்சி இணையதளத்தில் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ரேஸ் கோர்ஸ் மசூதிக்கு அக்டோபர் 7 அன்று மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதாகவும் பள்ளிவாசல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது .
சுமார் 150 ஆண்டுகள் பழமையான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசல், புதுடெல்லி மாநகராட்சி இணையதளத்தில் பாரம்பரியச் சொத்து எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், இது 1977-ம் ஆண்டின் டெல்லி அரசிதழில் இடம்பெற்ற வக்ஃப் சொத்து என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ரேஸ் கோர்ஸ் மசூதியையும் அதனை ஒட்டியுள்ள மயானத்தையும் பாதுகாக்க, மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலையிட வேண்டும் என ஜமியத் உலமா-இ-ஹிந்தி அமைப்பு கோரியுள்ளது
இந்த அமைப்பின் பிரதிநிதிகள் குழுவின் சார்பாக ஆஜரான முகமது ஹக்கீமுதீன் காஸ்மி.1977 ஆம் ஆண்டு டெல்லி அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ள என்.டி.எம்.சி பாரம்பரியப் பட்டியலில் இந்த மசூதி இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தால் பராமரிக்கப்படும் திருத்தப்பட்ட பட்டியலிலும் இந்தத் தளம் இடம்பெற்றுள்ளது என்று ஒரு குறிப்பாணையைச் சமர்ப்பித்தார்.
மேலும் சட்டரீதியான தகராறு தீர்க்கப்படும் வரை இடிப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என அதிகாரிகளிட ம் கேட்டுக்கொண்டுள்ளார். ஜமியத் அமைப்பு இது தொடர்பாக டெல்லி வக்ஃப் வாரியம் மற்றும் என்.டி.எம்.சி.யிடம் இருந்தும் அறிக்கைகளைக் கோரியுள்ளது. இந்த அறிவிப்பிற்கு காஷ்மீரின் மதகுரு மிர்வைஸ் உமர் ஃபாரூக் கவலை தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இல்லம் அருகே அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலையில் இருந்து குடிசைவாழ் மக்களை வெளியேற்றுவது உள்ளிட்ட ஒரு பெரிய வெளியேற்ற நடவடிக்கையின் பகுதியாக இந்த மசூதி விவகாரமும் அடங்கியுள்ளது
ஆங்கில செய்தி வெளியீட்டின் படி டெல்லி உயர் நீதிமன்றம் அக்டோபர் 19, திங்கட்கிழமை அன்று, அப்பகுதியில் இருந்து குடிசைவாசிகளை வெளியேற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளது. அதனப்படி அப்பகுதி உள்ள மக்களை சுமார் 45 கி.மீ தொலைவில் உள்ள சவ்தா கேவ்ரா என்ற மறு குடியமர்வு காலனிக்கு அவர்களை அழைத்துச் சென்று கல்வி, போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது