அதர்மத்திற்கு எதிரான தர்மத்தின் வெற்றி.. ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி விஜயதசமி வாழ்த்து

ஒவ்வொருவரின் வாழ்வும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியால் வளமடையட்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம்
பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு
Published on: 
Summary

பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் நாட்டு மக்களுக்கு விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நவராத்திரி விழாவின் 9ஆம் நாளான நேற்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தோழிகளும், கல்வியும் சிறக்க பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத்தொடர்ந்து நவராத்திரி விழாவின் 10ஆம் நாளான இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் கல்வி கற்றலை தொடங்க இத்தினம் உகந்ததாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோர் நாட்டு மக்களுக்கு விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மோடி வாழ்த்து

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த இந்த வெற்றித் திருவிழா, அனைவரின் மனவுறுதிக்கும் புது வலிமையை அளிக்கட்டும்.

ஒவ்வொருவரின் வாழ்வும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியால் வளமடையட்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம்.” என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வாழ்த்து

அதேநேரம் ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், "விஜயதசமி திருநாளானது தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியையும், அதர்மத்திற்கு எதிரான தர்மத்தின் வெற்றியையும் பறைசாற்றுகிறது.

ஒழுக்கம் மற்றும் நன்னடத்தையின் வடிவமாக விளங்கும் நற்பண்புகளின் நாயகர் ஸ்ரீராமரின் உன்னத வழிகளைப் பின்பற்றி வாழ இத்திருநாள் ஊக்கமளிக்கிறது.

நமது கலாச்சார பாரம்பரியத்தின் உன்னத விழுமியங்களைக் கடைப்பிடித்து, அனைவரும் உள்ளடக்கிய ஒரு சமூகம் மற்றும் வளர்ந்த பாரதத்தை உருவாக்க மக்கள் பங்களிக்க வேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com