எத்தனால் பெட்ரோல்  
இந்தியா

22% முதல் 30% எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரி விலக்கு - மத்திய அரசு அதிரடி

இதில் 22%, 25%, 27% and 30% ஆகிய வகைகள் அடங்கும்.

ஈரான் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் காரணமாக மத்திய கிழக்கில் இருந்து ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் உலகளவில் எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கச்சா எண்ணெய் வரத்து குறைந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் 22% முதல் 30% வரை எத்தனால் கலக்கப்படும் பெட்ரோலுக்கு மத்திய கலால் வரியில் இருந்து முழு விலக்கு அளிப்பதாக மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் 22%, 25%, 27% and 30% ஆகிய கலப்பு வகைகள் அடங்கும்.

முன்னதாக 20% வரையிலான எத்தனால் கலப்பிற்கு மட்டுமே வரி சலுகைகள் இருந்த நிலையில், தற்போது அந்த வரம்பு 30% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அரசிதழில்

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசிதழில், இந்தியத் தர நிர்ணய அமைப்பான பிஐஎஸ் பரிந்துரைத்துள்ள விதிகளின்படி தயாரிக்கப்படும் எத்தனால் கலப்பு பெட்ரோல் வகைகளுக்கு கலால் வரி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 20% வரையிலான எத்தனால் கலப்பிற்கு மட்டுமே வரி சலுகைகள் இருந்த நிலையில், தற்போது அதனை 30% ஆக உயர்த்தியிருப்பது

திணிப்பு

ஏற்கனவே மத்திய அரசு எத்தனால் கலந்த பெட்ரோலை ஊக்குவித்து வரும் நிலையில் இந்த வரிக்குறைப்பு வந்துள்ளது. ஆனால் எத்தனால் கலந்த பெட்ரோல் வாகனங்களின் நீண்டகால செயல்திறனை பாதிக்கும் என்ற விமர்சனம் பலரால் முன்வைக்கப்படுகிறது.

மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் இரு மகன்கள் எத்தனால் தயாரிப்பு தொழிலில் உள்ளதால் அவர்களின் சொந்த நலன்களுக்காக எத்தனால் கலந்த பெட்ரோலை மத்திய அரசு தொடர்ந்து மக்களிடம் திணித்து வருவதாக எதிர்க்கட்சி தரப்பில் விமர்சனம் வைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.