உத்தரப் பிரதேசம், பீகார், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள 28 சட்ட மேலவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் 11 இடங்களுக்கும், பீகாரில் 8 இடங்களுக்கும், கர்நாடகாவில் 4 இடங்களுக்கும், மகாராஷ்டிராவில் 5 இடங்களுக்கும் சட்ட மேலவை தேர்தல் நடக்கிறது.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 27 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சட்ட மேலவை (MLC) தேர்தலில், "பட்டதாரி தொகுதி" (Graduates' Constituency) மற்றும் "ஆசிரியர் தொகுதி" (Teachers' Constituency) என இரு சிறப்பு பிரிவுகள் உள்ளன.
பட்டதாரி தொகுதியில் நடக்கும் வாக்குபதிவில் அந்த தொகுதியில் வசிக்கும் பட்டப்படிப்பை முடித்தவர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
அதேநேரம் ஆசிரியர் தொகுதியில் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் வாக்களிப்பர். இந்த முறை அவர்களுக்கு பிரதிநிதித்துவம்
சட்ட மேலவையின் மொத்த உறுப்பினர்களில் 1/12 பங்கினர் பட்டதாரிகளாலும், மற்றொரு 1/12 பங்கினர் ஆசிரியர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
பீகாரில் 4 பட்டதாரி மற்றும் 4 ஆசிரியர் தொகுதிகளில் மொத்தம் 150 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பட்டதாரி தொகுதிகளில் பாட்னா, தர்பங்கா, திருஹட் மற்றும் கோசி ஆகிய இடங்களும், ஆசிரியர் தொகுதிகளில் பாட்னா, தர்பங்கா, திருஹட் மற்றும் சரண் ஆகிய இடங்களும் அடங்கும்.
உத்தரப் பிரதேச சட்ட மேலவையின் 11 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 5 பட்டதாரி மற்றும் 6 ஆசிரியர் தொகுதிகள் அடங்கும்.
மகாராஷ்டிர சட்டசபையில் உள்ள 5 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 3 பட்டதாரிகள் மற்றும் 2 ஆசிரியர்கள் தொகுதிகள் அடங்கும்.
கர்நாடக சட்டசபையில் உள்ள நான்கு இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு பட்டதாரிகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் தொகுதிகள் அடங்கும்.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சியின் கீழ், 1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமேலவை (ஒழிப்பு) சட்டம் மூலம் சட்ட மேலவை ஒழிக்கப்பட்டது. இதனிடையே தமிழ்நாட்டில் சட்ட மேலவையை கொண்டு வர தவெக அரசு திட்டமிட்டுள்ளதாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.