

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதையடுத்து, தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற முயற்சி மேற்கொண்டு வருகிறது.
முதலில் காங்கிரசிடம் த.வெ.க. ஆதரவு கோரியதாகவும் இதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும்பாலானோர் ஆதரித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி அமைந்ததும் சட்டமேலவையை கொண்டு வர தவெக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று நடந்த தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசித்ததாக தெரிய வந்துள்ளது.
மாநிலச் சட்ட மேலவை (விதான் பரிஷத்) என்பது இந்திய மாநிலங்களில் சட்டமியற்றும் சட்டமன்றங்களின் மேலவையைக் குறிப்பதாகும். இந்தியாவின் 28 மாநிலங்களில், 6 மாநிலங்களில் சட்ட மேலவை உள்ளது. அவை, உத்தரப் பிரதேசம், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம்.